Search This Blog

Friday, July 20, 2012

வேல செய்றீங்களா? உடம்பு நல்லாருக்கா?



எப்ப பாத்தாலும் வேல வேலன்னே இருக்கீங்களா?  ஜாக்கிரத! வேலை சார்ந்த வியாதிகள்  அதிகரித்து வருகின்றன அப்டீன்னு  ஓர் ஆய்வு சொல்லுது

அது என்ன?

சுமாராக 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியமிழந்து இருக்கிறார்களாம். அவர்களில் 1.20 லட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்கிறது, `பணியிட வியாதிச் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின்' புள்ளிவிவரம். இது உலக அளவில் 17 சதவீதம்.

அதாவது பணியிடப் பாதிப்பு என்பது:

* கோழிப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் `பேரட் பீவர்'   

* ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்வோருக்கு ஏற்படும் காயங்கள், 

*சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவற்றுடன்,

ஒயிட்காலர் ஜாப்' எனப்படும் அலுவலகப் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் நோய்கள்:

* உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்து,  6 முதல் 8 மணி நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை செய்கிறீர்களென்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள்  வரும்.

* நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப் பழக்கத்துக்கு இணையானது என்கிறார்கள் மருத்துவர்கள். அது, 
       * `டைப் 2' சர்க்கரை நோய், 
       * இதய நோய், 
       * உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லலாம்.

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஓடியாடி வேலை செய்யும் மற்றவர்களை விட அதிக எடை போடும் வாய்ப்பு இரண்டு மடங்கு. 

சரி, வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் - 
பி.கே. நாக், இயக்குனர், 
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் 

என்னிடம் வரும் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் 
அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள 
இளம் அலுவலர்கள் -  
மருத்துவர் சஞ்சய் போருடே, பிரீச் கேண்டி மருத்துவமனை, மும்பை 
.
சரி என்ன தீர்வு?
 
`இருக்கைப் பணி' புரிபவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். 




இந்தப் படங்களிலுள்ளது போல் எப்போதெல்லாம் இடைவெளி கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படங்களில் உள்ளது போல் செய்யவும். 

இவையெல்லாம் ஒரு ரிலாக்சுக்காகத்தான். ஆனால் தினமும் ஒரு 30 நிமிடங்கள் முறையான உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்.

Above technics are meant for office going peoples. Thanks for doctors, books, internet magazines for their  input. 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...